தொழிலாளி ெகாலை வழக்கில் அண்ணன் கைது


தொழிலாளி ெகாலை வழக்கில் அண்ணன் கைது
x

அருப்புக்கோட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன்கள் சரவணகுமார் (வயது24), ராஜா (21), சசிக்குமார் (18). தொழிலாளி. இதில் சரவணகுமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோணுகால் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் சசிக்குமார் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சசிக்குமாருக்கும், சரவணகுமாருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். கணபதி வீட்டில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு மிகவும் சிறியது ஆகும். இந்தநிலையில் சசிக்குமார் தினமும் மது அருந்திவிட்டு சரவணகுமாருடன் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததால் சரவணகுமார் மனைவி முத்துப்பாண்டி கோபமடைந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மன வேதனையில் இருந்த சரவணகுமார் மனைவி பிரிந்து சென்றதற்கு சசிக்குமார் தான் காரணம் என நினைத்து ஆத்திரத்தில் மதுபோதையில் வீட்டிற்குள் தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்த சசிக்குமாரை வாயை மூடி கழுத்தை அறுத்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் 5 முறை வயிற்றில் கத்தியால் குத்தியதும், அவர் துடி, துடித்து இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்தனர். அண்ணனே, தம்பியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story