பஸ்- மோட்டார் சைக்கிளில் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
மோட்டார் சைக்கிளில் பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமசமுத்திரம் அருகே பல்ஜி மதுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் குமார் (வயது 26). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கபுரத்தில் உள்ள கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஆர்.கே. பேட்டை- சோளிங்கர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி விசப்பட்ட குமார் தலையில் பலத்த காயம் அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே. பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.