சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை - நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு


சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை - நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு
x

23 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 258 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலையாகவும், தேவைப்பட்டால் 8 வழிச்சாலையாகவும் அமைப்பதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட 23 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story