விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் நடைபெற்ற அரையாண்டு தேர்வில் காப்பி அடித்ததாக மாணவியின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்து, டிசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story