ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் - 100-க்கும் மேற்பட்டோர் கைது


ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் - 100-க்கும் மேற்பட்டோர் கைது
x

ஆவடியில் ரெயில் மறியலில் ஈடுப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதைத்தொடர்ந்து அவரது எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஆவடி-இந்துக்கல்லூரி ரெயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரெயில்கள் செல்லக்கூடிய மார்க்கத்தில் திடீரென தண்டவாளத்தில் ரெயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாகவும் செல்லக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக சென்றன. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து ஆவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலை அனைவரையும் விடுதலை செய்தனர்.

1 More update

Next Story