தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு


தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில்  நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
x

தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை,

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்த்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் 8 நாட்கள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் கிரீன்வேஸ் சாலை, பிஷப் கார்டனில் உள்ள அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் என்பவரின் வீடு, அபிராமபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல் வீடு மற்றும் கரூரில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக ஒரு வழக்கு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்து. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பல மணி நேரம் நீடித்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும், செந்தில் பாலாஜியின் வீட்டிலும் நடந்த அமலாக்கத்துறை சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.


Next Story