கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?


கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 23 Nov 2023 7:09 AM IST (Updated: 23 Nov 2023 7:39 AM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று (23-11-2023) நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story