கனமழை முன்னெச்சரிக்கை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை


கனமழை முன்னெச்சரிக்கை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
x

நேற்று அதிகாலை முதல் விடாமல் பெய்த கனமழையால் நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தென்காசி,

தென் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாது பெய்த மழையால் 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி அங்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக தாமிபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரையோர பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில், அங்கு நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story