பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி பயணம்: 'செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேச மாட்டேன்' - அண்ணாமலை


பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி பயணம்: செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேச மாட்டேன் - அண்ணாமலை
x

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக பா ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அண்ணாமலை அங்கு நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக தலைமையிடம் விளக்கம் அளித்து இருந்தார். இந்தநிலையில் அண்ணாமலை டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பா ஜனதா வட்டாரத்தில் விசாரித்த போது இது ஒரு வழக்கமான சுற்றுப்பயணம் தான், மாநிலத்தில் உள்ள பா ஜனதாவின் செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமைக்கு தெரிவிப்பதற்காக மாநில தலைவர்கள் டெல்லி செல்வது வழக்கம் என்று தெரிவித்தனர். மேலும், அண்ணாமலை இங்கிலாந்து சென்று சர்வதேச அரசியல் படிப்பு படிக்க செல்வதற்கான அனுமதி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இந்த பரபரப்புக்கிடையே கவர்னர் ஆர் என் ரவியும் இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.

முன்னதாக திடீரென டெல்லி செல்வது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன், முயற்சி செய்ய வேண்டாம்" என்று கூறிவிட்டு சென்றார்.

1 More update

Next Story