தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு துளியும் இல்லை - துரைமுருகன்


தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு துளியும் இல்லை - துரைமுருகன்
x
தினத்தந்தி 19 Sept 2023 10:07 AM IST (Updated: 19 Sept 2023 12:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு துளியும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

புது டெல்லி,

காவிரி விவகாரம் தொடர்பாக புது டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய பிறகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிக் கூறினோம். காவிரியில், கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு துளியும் இல்லை என்று துரைமுருகன் கூறினார்.


Next Story