மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் - தி.மு.க. பங்கேற்பு


மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் - தி.மு.க. பங்கேற்பு
x

பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 8-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மாநில உரிமைகள் காத்திட மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 8-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


Next Story
  • chat