சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்... 9 பெட்டிகள் சேதம்


சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்... 9 பெட்டிகள் சேதம்
x
தினத்தந்தி 4 Feb 2024 6:45 PM GMT (Updated: 4 Feb 2024 6:55 PM GMT)

நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

நெல்லை,

நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், குறிப்பிட்ட தொலைவை மக்கள் விரைவாக சென்றடைய முடிகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் இருந்து தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக நெல்லைக்கு அதாவது தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் இந்த ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயண நேரம் காரணமாக பயணிகள் இந்த ரெயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்தன. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story