ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது


ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது
x

ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரணை அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 44). குத்தகைக்கு வீடு இருப்பதாக இவர் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

விளம்பரத்தை பார்த்த காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஆதனூர் சாலை பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் லோகேஷ்பிரபு (வயது 36) ரூ.6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டை குத்தகைக்கு விடாமல் தமிழ்ச்செல்வி மற்றொருவரது வீட்டை காண்பித்து குடும்பத்துடன் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக லோகேஷ்பிரபு மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வி அவரது மகன் சதீஷ்குமார்(20) ஆகியோரை கைது செய்தனர்.

தமிழ்செல்வியின் கணவர் தணிகாச்சலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story