நாகை: இலங்கையில் இருந்து தனியாக படகில் வந்த நபர் - போலீசில் ஒப்படைப்பு


நாகை: இலங்கையில் இருந்து தனியாக படகில் வந்த நபர் - போலீசில் ஒப்படைப்பு
x

வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு வந்து சேர்ந்த நபரை மீனவர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நாகை,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில், இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தனி ஆளாக படகு மூலம் வந்து சேர்ந்துள்ளார். அவரை அங்கிருந்த மீனவர்கள் பிடித்து வேட்டைக்காரனிருப்பு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் மோகனராசா என்பதும், இலங்கையில் உள்ள பருத்தித்துறை கடற்கரையில் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. அவரை அழைத்து வந்த நபர் யார், மற்றும் அவர் வந்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story