பள்ளிகள் திறப்பு: மாணவ செல்வங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பள்ளிகள் திறப்பு: மாணவ செல்வங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர்.

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர்.

புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பியுள்ள மாணவ செல்வங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story
  • chat