பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்கவில்லை - சந்திப்பு ரத்து...!


பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்கவில்லை - சந்திப்பு ரத்து...!
x

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே நேரம் கேட்டிருந்த நிலையில் சந்திக்கவில்லை சந்திப்பு ரத்தாகியுள்ளது.

சென்னை,

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

இந்த பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் 2.36 லட்சம் சதுர மீட்டரில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை - கோவை இடையேயான 'வந்தே பாரத்' ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரெயில்வே, நெடுஞ்சாலை தொடர்பாக பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் இன்று இரவு கர்நாடகா செல்கிறார். இதனிடையே, சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனித்தனியே நேரம் கேட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனித்தனியே நேரம் கேட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கவில்லை.



Next Story