நவம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை - பாஜக


நவம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை - பாஜக
x

பிரதமர் மோடி வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காந்திகிராம அறக்கட்டளையின் பிளாட்டினம் விழா மற்றும் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய தினம் நான்கு மாநிலங்களில் நிகழ்ச்சிகள் இருப்பதால், காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் நடைபெறும் விழாவைத் தவிர, தமிழகத்தில் பிரதமருக்கு வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


Next Story