வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு


வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
x

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ரவிக்குமார் என்ற ரவி (வயது 48) மற்றும் அரக்கோணத்தை சேர்ந்த நவீன் (33) ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் வரை மோசடி செய்தனர்.

இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், ரவிக்குமார் மற்றும் நவீன் இருவருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story