மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது.
சென்னை,
கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் கடந்த மாதம் 18ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் பின் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
இதனிடையே பா.ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள் குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்தும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 25ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.