ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2023 7:15 PM IST (Updated: 3 Aug 2023 8:38 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வெங்கம்பூர்-அ கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் இன்று (3-8-2023) காலை கோவில் திருவிழாவிற்காக தீர்த்தம் எடுக்கச் சென்ற, கொடுமுடி, தட்டாம்பாளையம், கொண்டலாம்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ், த/பெ.கோபி (வயது19), ஜெகதீஸ்வரன், த/பெ.சிவகுமார் (வயது 18) மற்றும் சௌத்ரி, த/பெ.கோபி (வயது 14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story