ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி - வாலிபர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி - வாலிபர் கைது
x

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 35). தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது நண்பர் ரெயில்வே துறையில் பணி செய்வதாகவும், தற்போது ரெயில்வேயில் காலியிடங்கள் உள்ளதாகவும் தனக்கு தெரிந்தவர்களிடம் கூறினார். மேலும் அந்த இடங்களுக்கு வேலையில் சேர்த்து விடுவதாக கூறி சென்னையை சேர்ந்த 7 பேரிடம் கூறினார். இதை அவர்களும் உண்மை என நம்பினர்.

இதற்காக அவர்கள் 7 பேரையும் பல்லாவரத்துக்கு தனித்தனியாக வரவழைத்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.27 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி அவர்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றினார்.

அவரிடம். பணம் கொடுத்து ஏமாந்த 7 பேரும் இந்த மோசடி தொடர்பாக பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story