தாம்பரம்-திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தாம்பரம்-திருச்சி இடையே வரும் 30-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தாம்பரம்-திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து வரும் 30-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்(அக்டோபர் 1-ந்தேதி) காலை 6.10 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் திருச்சியில் இருந்து அக்டோபர் 1-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள்(அக்டோபர் 2-ந்தேதி) காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story