'மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்' கல்லூரி விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு


மாணவர்கள் அரசியல் பேச வேண்டும் கல்லூரி விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு
x

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும் என தாம்பரத்தில் நடந்த கல்லூரி விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு மகளிர் மாணவ அமைப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும், அரசியல் யாரையும் விடாது. பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உரிமைகள் மற்றும் மாற்றங்கள் என அனைத்துக்கும் அரசியல் தான் காரணம்.

அதனால் தான் மாணவர்கள் அரசியல் பேசவேண்டும். அரசியலில் ஈடுபடவேண்டும். அரசியலை மாற்றியமைக்க கூடிய உரிமைகளை, திறமைகளை வளர்த்து கொண்டு மாணவர்கள் தெளிவு பெறவேண்டும். அதன் பொருட்டு இந்த வாய்ப்பை சென்னை கிறிஸ்தவ கல்லூரி உருவாக்கி கொடுத்தது பாராட்டத்தக்கதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் வில்சன், மகளிர் மாணவ அமைப்பு நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story