சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..!


சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..!
x
தினத்தந்தி 3 Nov 2023 6:55 AM IST (Updated: 3 Nov 2023 7:32 AM IST)
t-max-icont-min-icon

விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த விமானம், ஓடுபாதைக்கு சென்றபோது அதில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 180 பேர் இருந்தனர்.

இந்நிலையில் விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விமானி, அது குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

1 More update

Next Story