தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x

கவர்னர் உரையின் வரைவில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து நிதி நிலை அறிக்கை 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் உரையின் வரைவில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story