கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை


கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை
x

சென்னை அருகே கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கோபி (வயது 31). இவருடைய மனைவி சிந்துஜா (29). இவர்களுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கோபி 'ஆடிட்டர்' தொழில் செய்ததோடு பலரிடம் கடன் பெற்று அரிசி மண்டி, 'டூவீலர் ஷோரூம்', எண்ணெய் கடை, ஏலச்சீட்டு உள்ளிட்ட தொழில்களை செய்து நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடனில் மூழ்கிய கோபி, மேடவாக்கம் வடக்குப்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள், வாடகை வீட்டு முகவரியை கண்டு பிடித்து அங்கு வந்து கடனை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் சிலர் தனக்கு பணம் தர வேண்டியுள்ளது. அதை வாங்கி வருகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு கோபி கடந்த வாரம் ஆந்திரா சென்றார். இதற்கிடையில் கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் மனைவி சிந்துஜாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சிந்துஜா, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story