தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு


தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x

திருத்தணியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, அன்று இரவு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். திருத்தணி பஸ் டிப்போ எதிரே சசிகுமார் நடந்த சென்றபோது, அங்கு போதையில் இருந்த பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (23), லட்சுமணன் (24), சந்தோஷ் பாபு (23), விக்னேஷ் (20) ஆகிய 4 பேரும் சசிகுமாரை வழிமறித்து கடுமையாக தாக்கினர்.

இதில் காயம் அடைந்த சசிகுமார் செல்போனில் தொடர்பு கொண்டு தனது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சசிகுமாரின் தந்தை ரமேஷ், தாய் மேனகா, அண்ணன் கார்த்திக் ஆகியோர் ஏன் என் மகனை அடித்தீர்கள் என்று தட்டி கேட்டதற்கு அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த அந்த 4 பேரையும் அவ்வழியாகச் வந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்ஸ், லட்சுமணன், சந்தோஷ் பாபு, விக்னேஷ் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story