திருமணமான ஒரே வருடத்தில் சோகம்: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு கணவர் அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை


திருமணமான ஒரே வருடத்தில் சோகம்: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு கணவர் அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை
x

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு கணவர் அனுப்பாததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை

சென்னை வடபழனி, அழகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தனது உறவினரான சரண்யா (27) என்பவருடன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என சரண்யா கூறினார். ஆனால் அதற்கு விவேக் மறுத்தார்.

இதனால் விரக்தி அடைந்த சரண்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவேக், சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரண்யா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


Next Story