மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி வி.சி.க. ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு


மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி வி.சி.க. ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
x

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும் மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 29-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதேபோல் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை நடைமுறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்துள்ளோம்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.



Next Story