பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் வாலிபர் கைது


பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் வாலிபர் கைது
x

பாலியல் வழக்கில் தேடப்பட்ட பஞ்சாப் வாலிபரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்தவர்களின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 32) என்பவரின் பாஸ்போர்ட் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அதில், 2022-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசார் பாலியல் புகாரில் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருவதும், இதுபற்றி பஞ்சாப் மாநில போலீசார் விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்து இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற தினேஷ்குமாரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை வெளியில் விடாமல் ஒரு அறையில் தங்க வைத்தனர். இது பற்றி லூதியானா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பஞ்சாப்பில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை வந்து தினேஷ்குமாரை அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story