மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்கள் யார்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு


மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்கள் யார்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2024 12:05 PM GMT (Updated: 15 March 2024 12:25 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

இதையடுத்து மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி, மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்.


Next Story