சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது


சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
x

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரி முருகன் கோவில் செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து இலவச தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம் என அனைத்து வரிசையிலும் ஏராளமானோர் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு செல்வர். நேற்று முன்தினம் கோவிலில் சிறப்பு தரிசன வரிசையில் கோவில் ஊழியர் மனோஜ் குமார் என்பவர் கட்டண டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சின்னம்பேடு பெரிய காலனியைச் சேர்ந்த அசோக் குமார் (வயது 30) என்பவர் 2 நபர்களை அழைத்து வந்து சிறப்பு கட்டண வரிசையில் இலவசமாக தரிசனம் செய்ய அனுப்பி வைக்குமாறு கூறினார். ஆனால், இதற்கு மனோஜ் குமார் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வந்து மனோஜ் குமாரை சரமாரியாக தாக்கினார். இந்தச் சம்பவம் குறித்து மனோஜ்குமார் நேற்று ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story