சென்னை, திருவள்ளூர் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை, திருவள்ளூர் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணையம் தகவல்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஜனவரி 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருந்தனர். அதில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேரும், பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 391 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். அதனடிப்படையில் தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது.
தற்போது 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் இந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும், பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அறிவித்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கையின் விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி - 1,37,409 (ஆண்கள்), 1,44,184 (பெண்கள்), 39 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,81,632;
பொன்னேரி - 1,30,478 (ஆண்கள்), 1,36,835 (பெண்கள்), 32 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,67,345;
திருத்தணி- 1,41,962 (ஆண்கள்), 1,48,634 (பெண்கள்), 28 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,90,624;
திருவள்ளூர் - 1,33,723 (ஆண்கள்), 1,41,127 (பெண்கள்), 26 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,74,876;
பூந்தமல்லி - 1,75,937 (ஆண்கள்), 1,82,122 (பெண்கள்), 59 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,58,118;
ஆவடி - 2,19,532 (ஆண்கள்), 2,22,737 (பெண்கள்), 102 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 4,42,371;
மதுரவாயல் - 2,27,828 (ஆண்கள்), 2,24,087 (பெண்கள்), 146 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 4,52,061;
அம்பத்தூர் - 1,92,029 (ஆண்கள்), 1,92,112 (பெண்கள்), 94 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,84,235;
மாதவரம் - 2,26,062 (ஆண்கள்), 2,28,159 (பெண்கள்), 106 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 4,54,327;
திருவொற்றியூர் - 1,50,803 (ஆண்கள்), 1,55,020 (பெண்கள்), 145 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,05968;
ஆர்.கே.நகர் - 1,26,727 (ஆண்கள்), 1,36,149 (பெண்கள்), 104 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,62,980;
பெரம்பூர் - 1,55,308 (ஆண்கள்), 1,60,505 (பெண்கள்), 71 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,15,884;
கொளத்தூர் - 1,37,456 (ஆண்கள்), 1,43,605 (பெண்கள்), 67 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,81,128;
வில்லிவாக்கம் - 1,25,082 (ஆண்கள்), 1,30,133 (பெண்கள்), 63 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,55,278;
திரு.வி.க.நகர் - 1,06,327 (ஆண்கள்), 1,13,020 (பெண்கள்), 52 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,19,399;
எழும்பூர் - 95,705 (ஆண்கள்), 97,382 (பெண்கள்), 53 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 1,93,140;
ராயபுரம் - 94,188 (ஆண்கள்), 98,374 (பெண்கள்), 55 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 1,92,617;
துறைமுகம் - 91,578 (ஆண்கள்), 84,137 (பெண்கள்), 55 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 1,75,770;
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 1,14,934 (ஆண்கள்), 1,19,069 (பெண்கள்), 35 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,34,038;
ஆயிரம் விளக்கு - 1,17,253 (ஆண்கள்), 1,22,726 (பெண்கள்), 94 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,40,073;
அண்ணாநகர் - 1,40,230 (ஆண்கள்), 1,45,722 (பெண்கள்), 87 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,86,039;
விருகம்பாக்கம் - 1,45,367 (ஆண்கள்), 1,46,184 (பெண்கள்), 91 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,91,642;
சைதாப்பேட்டை - 1,36,768 (ஆண்கள்), 1,42,152 (பெண்கள்), 75 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,78,995;
தியாகராயநகர் - 1,20,871 (ஆண்கள்), 1,24,087 (பெண்கள்), 47 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,45,005;
மைலாப்பூர் - 1,31,152 (ஆண்கள்), 1,39,344 (பெண்கள்), 40 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,70,536;
வேளச்சேரி - 1,55,559 (ஆண்கள்), 1,58,884 (பெண்கள்), 94 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,14,537;
சோழிங்கநல்லூர் - 3,50,211 (ஆண்கள்), 3,48,500 (பெண்கள்), 109 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 6,98,820;
ஆலந்தூர் - 1,92,247 (ஆண்கள்), 1,96,737 (பெண்கள்), 48 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,89,032;
ஸ்ரீபெரும்புதூர் - 1,72,827 (ஆண்கள்), 1,82,318 (பெண்கள்), 53 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,55,198;
பல்லாவரம் - 2,16,959 (ஆண்கள்), 2,19,175 (பெண்கள்), 41 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 4,36,175;
தாம்பரம் - 2,06,679 (ஆண்கள்), 2,08,754 (பெண்கள்), 54 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 4,15,487;
செங்கல்பட்டு - 2,10,518 (ஆண்கள்), 2,17,806 (பெண்கள்), 55 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 4,28,379;
திருப்போரூர் - 1,44,178 (ஆண்கள்), 1,50,364 (பெண்கள்), 38 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,94,580;
செய்யூர் - 1,11,944 (ஆண்கள்), 1,15,428 (பெண்கள்), 30 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,27,402;
மதுராந்தகம் - 1,11,413 (ஆண்கள்), 1,15,213 (பெண்கள்), 59 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,26,685;
உத்திரமேரூர் - 1,25,683 (ஆண்கள்), 1,34,651 (பெண்கள்), 33 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,60,367;
காஞ்சீபுரம் - 1,49,400 (ஆண்கள்), 1,59,704 (பெண்கள்), 13 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,09,117;
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story