சினிமா செய்திகள்

கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி + "||" + Actor Rajinikanth paid homage to Kannada actor Ambresh

கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ்.  இவர் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், மத்திய மந்திரியாக இருந்துள்ளார்.  சித்தராமையாவின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தபோது, வயது முதிர்வு காரணமாக அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதன்பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் அம்பரீசிற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரு விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நடிகர் அம்பரீஷ் நேற்று இரவு மரணமடைந்தார்.

கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்த நடிகர் அம்பரீஷ் இதுவரை 208 படங்களில் நடித்துள்ளார்.  அவருக்கு சுமலதா என்ற மனைவியும் மற்றும் மகன் அபிஷேக்கும் உள்ளனர்.

அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.  மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் தமிழில் பிரியா என்ற படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்தும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது நெருங்கிய நண்பரான அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆச்சரியமிக்க ஒரு மனிதர்.  எனது நல்ல நண்பர்.  அவரை இன்று இழந்து விட்டேன்.  அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.