பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை
x

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

லாகூர்,

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒருதொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு எஞ்சிய 265 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால், இம்ரான்கானின் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.

இதனிடையே, தேர்தலில் பதிவான எண்ணப்பட்டுவந்த நிலையில் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் சுயேட்சையாக வேட்பாளர்கள் 59 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 47 தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 41 தொகுதிகளிலும், மற்றவை 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டுவரும் நிலையில் இன்று நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story