உக்ரைனின் திடீர் தாக்குதல்: 25 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா


உக்ரைனின் திடீர் தாக்குதல்: 25 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா
x

கோப்புப்படம்

உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலின்போது அந்நாட்டின் 25 டிரோன்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது.

மாஸ்கோ,

உக்ரைன் உடனான ரஷியா போர் நீண்ட இழுபறியை சந்தித்து வருகின்றது. இருதரப்பினரும் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இருநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்கள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவற்றை உலகநாடுகள் மறைமுகமாகவும் நேர்முகத்திலும் கொடுத்து உதவி செய்து வருவதால் போரின் கோரத்தாண்டவம் குறைந்தப்பாடு இல்லை.

இந்தநிலையில் ரஷியா மீது உக்ரைன் ராணுவம் நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷியாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உக்ரைன் ராணுவத்தினர் கீவ்வில் இருந்து சரமாரியாக டிரோன்களை செலுத்தினர். இந்தநிலையில் உக்ரைன் ராணுவத்தின் டிரோன்கள் வருகையை அறிந்த ரஷிய வான்பாதுகாப்பு தளவாடங்கள் அதனை மறித்து எதிர்த்தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தில் 25-க்கும் அதிகமான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தநிலையில் உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில் ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story