உலகக்கோப்பை கிரிக்கெட்; டெல்லியில் தீவிரமடையும் காற்று மாசு...இலங்கை-வங்காளதேசம் போட்டி நடைபெறுவதில் சிக்கல்...?
காற்று மாசு அதிகமாக உள்ளதால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
டெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் டெல்லியில் மோத உள்ளன. இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இலங்கை, வங்காளதேசம் வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
இந்நிலையில் காற்று மாசு அதிகமாக உள்ள காரணத்தால் நாளை இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது. காற்று மாசு அதிகமாக உள்ளதால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.