உலகக்கோப்பை கிரிக்கெட்; 2வது வெற்றியை பதிவு செய்யுமா வங்காளதேசம்...? - இலங்கையுடன் நாளை மோதல்...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
டெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் டெல்லியில் மோத உள்ளன.7 ஆட்டங்களில் ஆடியுள்ள வங்காளதேசம் 1 வெற்றி, 6 தோல்வி கண்டு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டது.
அதேவேளையில் 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ள இலங்கை அணிக்கும் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக முடிந்துவிடும். இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற இலங்கை கடுமையாக போராடும்.
டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகரித்து வருவதால் இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.