2.6 கோடி பேருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி சாத்தியமற்றது - பா.ஜனதா

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்திருந்தார்.;

Update:2025-10-24 02:08 IST

கோப்புப்படம்

பாட்னா,

பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக உள்ளார். தற்போது பீகாரில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 6ம் தேதியும், 2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளம் ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதை பா.ஜனதா நிராகரித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “2 கோடியே 60 லட்சம் பேருக்கு அரசு வேலை அளிப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறியது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதற்கு ரூ.12 லட்சம் கோடி தேவைப்படும். பீகாரின் மொத்த பட்ஜெட்டே ரூ.3 லட்சம் கோடி மட்டும்தான். பிறகு எங்கிருந்து அவர் வேலை கொடுப்பார்? வாக்காளர்களை திசைதிருப்ப ராஷ்டிரீய ஜனதாதளம் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஊழல் கறைபட்ட கட்சியை பீகார் மக்கள் நம்ப மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்