இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
பாகிஸ்தானுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்காக பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.ஏ) ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது எனவும், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு சர்வதேச நாணய நிதியம் அமைப்பை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐ.எம்.எப். அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ஆனாலும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கி அங்கீகரித்தது.
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை - பாகிஸ்தான் மீது இந்தியா டிரோன் தாக்குதல்
இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.
பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் அரசு அதிகாரி உயிரிழப்பு
அரசு அதிகாரியின் வீட்டை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
மாவட்ட மேம்பாட்டுக்குழு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி உயிரிழந்தது குறித்து மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா பதிவு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்
போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
போர் பதற்றத்தை தணிக்க சீனா, கத்தார் உதவியை நாடிய பாகிஸ்தான்
இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் கலங்கி இருக்கும் பாகிஸ்தான், பதற்றத்தை தணிக்க சீனா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் உதவியை ராஜாங்க ரீதியில் நாடியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய அவையில் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு மதிரி ஆசிப் காவ்ஜா இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
ஐ.பி.எல்.: தாயகம் திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்?
10 அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்களை தங்களது சொந்த நாடு மற்றும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியமும், சம்பந்தப்பட்ட அணிகளும் துரிதமாக ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் பதற்றம் எதிரொலி: வடமேற்கு ரெயில்கள் ரத்து
ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள முனாபாவ் கிராமத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 4 ரெயில்களை வடமேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் 5 ரெயில்கள் மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி: முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
26 இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி - முறியடித்த இந்தியா
நேற்று இரவு பாகிஸ்தான், இந்தியாவின் 26 இடங்களில் தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது.
தற்போது பல இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இடைவிடாமல் இந்தியா- பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.
இந்தியாவின் பதிலடியால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், பகல் முழுவதும் பதுங்கியது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 300 முதல் 400 டிரோன்களை இந்திய நிலைகளை நோக்கி ஏவியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலம் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.
இவற்றையெல்லாம் நமது இந்திய ராணுவம் நடுவழியில் மறித்து ஏவுகணைகள் மூலம் அழித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்கி, வலுவான பதிலடி கொடுத்தது.
இதனிடையே 3-வது நாளாக நேற்று இரவு 7 மணியளவில் காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.
இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சேத விவரம் தெரியவில்லை. இதற்கும் இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.