பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பரபரப்பாக வெளியாகும் பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம் என்ன..?
தேசிய ஜனநாயக கூட்டணி - 195 ( பா.ஜ.க. - 89 , ஜே.டி.யு. - 79 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 3 , மற்றவை - 3)
இந்தியா கூட்டணி - 42 (ஆர்.ஜே.டி. - 32 , காங்கிரஸ் - 4 , இடது சாரிகள் - 6)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 6
பீகார் தேர்தல் முடிவுகள்: ஆளும் கூட்டணியின் தலைமையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - பியூஷ் கோயல்
பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில், பெரும்பாலான சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாகவும், ஆளும் கூட்டணியின் தலைமையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 193 ( பா.ஜ.க. - 86 , ஜே.டி.யு. - 78 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 4)
இந்தியா கூட்டணி - 45 (ஆர்.ஜே.டி. - 32 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 8)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 5
இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 23,531 வாக்குகள்) மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 23,312 வாக்குகள் பெற்று பின் தங்கி உள்ளார்.
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது.
போட்டியிட்ட 101 தொகுதிகளில் 87 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஜே.டி.யு. 75 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. 19 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்களே.. 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தே.ஜ.கூட்டணி
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 189 ( பா.ஜ.க. - 86 , ஜே.டி.யு. - 76 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 5 , மற்றவை - 2)
இந்தியா கூட்டணி - 49 (ஆர்.ஜே.டி. - 35 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 8, விஜபி - 1)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 4
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: கொண்டாட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் பாட்னாவில் உள்ள ஜே.டி.(யு) அலுவலகத்த்தில் கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 189 ( பா.ஜ.க. - 84 , ஜே.டி.யு. - 74 , எல்.ஜே.பி. - 23, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 4)
இந்தியா கூட்டணி - 50 (ஆர்.ஜே.டி. - 36 , காங்கிரஸ் - 6 , இடது சாரிகள் - 7, விஜபி - 1)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 4
பீகார் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுலும், பிரியங்காவும் இந்தியா திரும்புவார்களா? - பாஜக கேள்வி
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் ஐடிவிங் தலைவர் அமித் மால்வியா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் வலைதளத்தில், “தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுல் காந்தியும் பிரியங்கா வத்ராவும் இந்தியா திரும்புவார்களா?.. அல்லது அவர்களின் கட்சி மேலும் பேரழிவில் மூழ்கும் போது அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டில் விடுமுறையில் இருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 193 ( பா.ஜ.க. - 83 , ஜே.டி.யு. - 80 , எல்.ஜே.பி. - 23, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 3)
இந்தியா கூட்டணி - 46 (ஆர்.ஜே.டி. - 34 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 7)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 4