மின் நுகர்வோருக்கு பெயர் மாற்ற உத்தரவு: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் வழங்கினார்
நெல்லை மாநகரில் 10, 11 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்காக அனைத்து துறைகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி வார்டு எண் 10 மற்றும் 11 பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்காக அனைத்து துறைகளின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வடக்கு புறவழிச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை முதல் நடைபெற்றது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எரிசக்தி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாமை திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின் நுகர்வோர் அளித்த பெயர் மாற்ற விண்ணப்பத்தை ஆய்வு செய்து வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட உத்தரவினை பயனாளிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது மக்கள் தொடர்பு அலுவலர் உதவி செயற்பொறியாளர் சங்கர், பாளையங்கோட்டை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், வண்ணாரப்பேட்டை உதவி மின் பொறியாளர் முருகன், சமாதானபுரம் உதவி மின் பொறியாளர் ஜெய்சிங் தர்மராஜ், திருநெல்வேலி சந்திப்பு உதவி மின் பொறியாளர் உமாமகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கடந்த 15.7.2025. முதல் நேற்று முன்தினம் 7.8.2025 வரை திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எரிசக்தி துறை சார்பில் பொதுமக்களிடம் இருந்து இதுவரை 675 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.