திருச்செந்தூர்: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருச்செந்தூர் பகுதியில் 15 வயது சிறுமியை, பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தார்.;

Update:2025-09-20 15:13 IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (வயது 28) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் நேற்று குற்றவாளி இசக்கிராஜாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லிங்ககனி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 24 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்