இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

Update:2025-09-20 09:04 IST
Live Updates - Page 3
2025-09-20 07:01 GMT

மும்பை-தாய்லாந்து விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசர தரையிறக்கம்


மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகர் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. 176 பயணிகள், 6 ஊழியர்கள் என 182 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது. மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.


2025-09-20 06:53 GMT

மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்


அருணாச்சல பிரதேசம் மேற்கு கமெங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிவு மையம் தெரிவித்துள்ளது


2025-09-20 06:49 GMT

நாகை, திருவாரூருக்கு விஜய் பயணம்: தி.மு.க. ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு


நாகை, திருவாரூரில் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அந்த இரு மாவட்டங்களிலும் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன


2025-09-20 06:35 GMT

நாகையில் தவெக தலைவர் விஜய்.. வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


நாகை பிரசாரத்திற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து நாகை மற்றும் திருவாரூரில் சாலை மார்கமாக சென்று பிரசாரம் செய்வதற்காக தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார். வாஞ்சி ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். 


2025-09-20 06:09 GMT

தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்து முடித்த உடனேயே வெல்லாலகே செய்த செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி


போட்டி நடந்து கொண்டிருந்தபோது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (வயது 54) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் குறித்து ஆட்டம் முடிந்ததும், பயிற்சியாளர் ஜெயசூர்யா, துனித் வெல்லாலகேவிடம் தெரிவித்தார். இதனால் அவர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.


2025-09-20 06:07 GMT

எச்1-பி விசாவுக்கு செக்... கோல்டு கார்டு திட்டம்; இந்திய பணியாளர்களுக்கு வேட்டு வைத்த டிரம்பின் அறிவிப்பு


அமெரிக்க கஜானாவில் பணம் சேரும் வகையிலான கோல்டு கார்டு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.

2025-09-20 06:06 GMT

மீண்டும் ரிலீசாகும் "அவதார் : தி வே ஆப் வாட்டர்" திரைப்படம்


20யத் சென்ச்சுரி ஸ்டுடியோஸ், அக்டோபர் 2ம் தேதி 'அவதார் தி வே ஆப் வாட்டர்' படத்தை மறு வெளியீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அவதார் படம் வெளிவருதற்கு முன்பு அதன் முந்தைய படத்தை மறு வெளியீடு செய்வது ஜேம்ஸ் கேமரூனின் வழக்கம். புதிய பாகத்தை புரிந்து கொள்ள முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் பார்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

2025-09-20 05:59 GMT

என் வயதில் பாதி உள்ள பசங்கதான் கல்யாணம் பண்ண விரும்புறாங்க.. அமிஷா படேல்


விஜய் நடித்த புதிய கீதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

2025-09-20 05:51 GMT

விஜயின் பரப்புரையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்


தவெக தலைவர் விஜயின் பரப்புரையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரும் வாகனங்கள் கங்களாஞ்சேரி வடகண்டம் விளமல் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரிலிருந்து நாகை வரும் வாகனங்கள் அம்மையப்பன் வெள்ளகுடி புலிவலம் வழியாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வெள்ளக்குடி புலிவலம் வாழ வாய்க்கால் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2025-09-20 05:10 GMT

அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவு


அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 15 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்