இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

Update:2025-09-20 09:04 IST
Live Updates - Page 4
2025-09-20 05:01 GMT

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?


5 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு, நீலகிரி, சென்னை, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-09-20 05:00 GMT

ஓமனுக்கு எதிரான வெற்றி: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?


189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


2025-09-20 04:58 GMT

சென்னை மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ க்யூஆர் ஆன்லைன் டிக்கெட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


2025-09-20 04:57 GMT

பீல்டிங்கின்போது தலையில் அடிபட்ட அக்சர்... பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா..?


அக்சர் படேல் தற்போது நலமுடன் இருப்பதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.


2025-09-20 04:55 GMT

டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் பாக்.வீரரை பின்னுக்கு தள்ளிய அர்ஷ்தீப் சிங்


அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த மைல்கல்லை அவர் 64 போட்டிகளில் எட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவூப்பை (71 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.


2025-09-20 04:53 GMT

8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. பேட்டிங் செய்ய களமிறங்காத கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. காரணம் என்ன..?


17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.


2025-09-20 04:51 GMT

ஓமனுக்கு எதிரான ஆட்டம்: டாஸின்போது ரோகித் சர்மாவை ஜாலியாக கலாய்த்த சூர்யகுமார் யாதவ்


இந்த ஆட்டத்தில் டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனை மறந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறினார். அப்போது “கடவுளே நான் ரோகித் சர்மா போல் மாறிக் கொண்டிருக்கிறேனே" என்று ஜாலியாக கூறினார்.


2025-09-20 04:49 GMT

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர்4 சுற்றில் இந்திய அணியின் முழு ஆட்ட விவரம்


8 அணிகள் பங்கேற்றிருந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றிருந்த 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது.


2025-09-20 04:48 GMT

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த மனிதர் அவர்தான் - பாக்.முன்னாள் வீரரின் பதிவு வைரல்


பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது அமீர், விராட் கோலியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.


2025-09-20 04:40 GMT

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. மீண்டும் சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது


இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,320-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்