காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனநாயகனின் 2 நாள் சாதனையை ஒரே நாளில் முந்திய பராசக்தி
ஜனநாயகன் டிரெய்லர் வெளியான 2 நாட்களில் 3.9 கோடி பேர் பார்த்துள்ளனர். பராசக்தி டிரெய்லரை 24 மணி நேரத்தில் 4 கோடி பேர் பார்த்துள்ளனர்.
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
49வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனத்தில் நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு
படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது, ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புத்தகமாக ஆதாரத்துடன் தயாரித்து வழங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர்.
வெனிசுலா அல்லது அந்நாட்டு மக்களுக்கு எதிராக எந்தப் போரும் இல்லை என்று அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார்.
திமுகவின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்கி உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி
கவர்னரை சந்தித்தப்பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை கவர்னரிடம் வழங்கி உள்ளோம். பல்வேறு துறைகளில் அடிக்கப்பட்ட ஊழல்களுக்கு ஆதாரம் உள்ளதால், முழுமையான விசாரணைக்கும் வலியுறுத்தி உள்ளோம்.
திமுக ஆட்சியில் ஊழல் பற்றி விசாரிக்க ஆணையம் தேவை. ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளேன். கடந்த 56 மாதங்களாக கார்ப்ரேட் நிறுவனம்போல், அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
61 விரைவு பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி
சென்னை தீவுத்திடலில் 61 புதிய விரைவு பஸ்களின் சேவையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். SETC சார்பில் முதற்கட்டமாக ரூ.38 கோடி மதிப்பீட்டில் 31 இருக்கை, 15 படுக்கை வசதிகளுடன் கூடிய 61 பஸ்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.