இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

Update:2025-07-08 09:15 IST
Live Updates - Page 4
2025-07-08 05:19 GMT

கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் சஸ்பெண்ட்


கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்திருந்தது. பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


2025-07-08 04:33 GMT

தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

2025-07-08 04:15 GMT

கடலூர்: கோர ரெயில் விபத்து; நடந்தது என்ன? ரெயில்வே விளக்கம்


கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே பாதுகாப்பு குழு விரைந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கேட் கீப்பர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


2025-07-08 03:59 GMT

மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா...? - பென் ஸ்டோக்ஸ் பதில்


சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

2025-07-08 03:57 GMT

காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-07-08 03:55 GMT

ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு


உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி ஆதரவாக இருந்து வருகிறது.

2025-07-08 03:53 GMT

கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து; 2 பேர் பலி


பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.


2025-07-08 03:52 GMT

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி

எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி, அரசிதழிலும் இது வெளியிடப்பட்டது.

அதன்படி, இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வீடுகளை கணக்கெடுக்கும்பணி. 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. அத்துடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

2025-07-08 03:49 GMT

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: பஸ், ஆட்டோக்கள் ஓடுமா?


நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.


2025-07-08 03:46 GMT

இன்றைய ராசிபலன் - 08.07.2025

விருச்சிகம்

வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை. உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Tags:    

மேலும் செய்திகள்