இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

Update:2025-06-14 08:42 IST
Live Updates - Page 4
2025-06-14 03:39 GMT

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு


இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பொதுமக்கள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 320 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய படைத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களில் ஈரான் நடத்திய தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தநிலையில், 50 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-14 03:34 GMT

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் - ஈரான் திட்டவட்டம்

ஈரானிய தலைவர் அயதுல்லா அலி காமெனி கூறுகையில், “இஸ்ரேலிய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்.. இஸ்ரேலுக்கு பதிலடி தர ஈரானிய ராணுவம் தயாராக உள்ளது. தாக்குதலை நடத்தி அவர்கள் (இஸ்ரேல்) மோதலை தொடங்கி வைத்துள்ளனர். இந்த தவறுக்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

2025-06-14 03:31 GMT

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025-06-14 03:26 GMT

அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்


இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அதன் ஏவுகணைகள் தாக்கியது.

மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.


2025-06-14 03:24 GMT

தொடரும் சோகம்.. ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு


ஆமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர் உள்பட மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


2025-06-14 03:23 GMT

7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-06-14 03:21 GMT

'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்?... கோவை அணியுடன் இன்று மோதல்


தனது முதல் இரு ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை ராயல் கிங்சை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது.


2025-06-14 03:19 GMT

மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கலாம்: பிரதமர் மோடி பெயரில் பரவும் போலி வீடியோ - மத்திய அரசு விளக்கம்


இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி என்.ஆர். நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக உள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா? என்று குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.




2025-06-14 03:16 GMT

இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'


நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை வரை பெய்யும் என்பதால் நிர்வாக ரீதியாக அங்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.


2025-06-14 03:15 GMT

இன்றைய ராசிபலன் - 14.06.2025

கடகம்

தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பது நல்லது. ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்க நல்ல கமிஷன் கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கருப்பு

Tags:    

மேலும் செய்திகள்