நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பு
எதிர்க்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி. ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம் கொலை வழக்கு: தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை நடத்தும் என்.ஐ.ஏ.
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ..ஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவதிக்கும் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம்தேதி திருமணம் நடைபெற்றது.
50-வது திருமண நாளை கொண்டாடும் அப்பா, அம்மாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
50வது திருமணநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
50வது திருமணநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன், கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு
தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. முதல்-மந்திரி மீதான இந்த தாக்குதலுக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,45,000 கன அடியிலிருந்து 1,05,000 கன அடியாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 3வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
பெங்களூரு ஞானபாரதியில் பெங்களூரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது பெயர். பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு சூட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
அதன்படி பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.