பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது -... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்"  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
Daily Thanthi 2025-05-07 05:18:22.0
t-max-icont-min-icon

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது - மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. 2001-ம் ஆண்டு நடத்தப்பட நாடாளுமன்ற தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதல்களில் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க நடத்தப்பட்ட சம்பவம் பஹல்காம் தாக்குதல் ஆகும். பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம்

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார். 

1 More update

Next Story